சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த அனிருத்-ஹிப்ஹாப் ஆதி

  • IndiaGlitz, [Friday,April 05 2019]

நடிகர் சிவகார்த்திகேயன், நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'Mr.லோக்கல்' திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'டக்குன்னு டக்குன்னு' என்ற இந்த பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி கம்போஸ் செய்திருக்கும் நிலையில் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். முதல்முறையாக அனிருத் , ஆதி என இரண்டு இசையமைப்பாளர்களும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கார்த்தி, ஆர்யா, ஜீவா, உதயநிதி மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.