காமெடி நடிகரின் படத்தில் இணைந்த அனிருத்-சிவகார்த்திகேயன்: படக்குழு அறிவிப்பு!

வைகைப்புயல் வடிவேலு நடித்த ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள நிலையில் சதீஷ் நடித்து வரும் ’நாய் சேகர்’ படத்தின் முக்கிய அப்டேட் சற்று முன் வெளியாகி உள்ளது.

சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ’நாய் சேகர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

’எடக்கு மடக்கு’ என்று தொடங்கும் இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்ய சிவகார்த்திகேயன் எழுதி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சதீஷின் ’நாய் சேகர்’ படத்தில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பாடலை பிரபல இயக்குனர்கள் ஏஆர் முருகதாஸ் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தான் நடித்த படத்தை ஆட்டோவில் வந்து பார்த்த பிரபல தமிழ் நடிகை!

பிரபல தமிழ் நடிகை தான் நடித்த திரைப்படத்தை தியேட்டரில் ஆட்டோவில் வந்து ரசிகர்களுடன் பார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பூஜா ஹெக்டேவை அடுத்து 'பீஸ்ட்' படப்பிடிப்பை முடித்த இன்னொரு பிரபலம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது

யார் அந்த கருப்பு ஆடு? ஆவேசத்தில் கத்திய சஞ்சீவ்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் 'அரசியல் மாநாடு' டாஸ்க் நடைபெற்றது என்பதும் மூன்று அரசியல் கட்சிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியிலும் நான்கு உறுப்பினர்கள்

வைகைப்புயல் வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

 தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் வைகை புயல் வடிவேலு என்பதும், கடந்த சில ஆண்டுகளாக அவர் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்தார் என்பதும் தெரிந்ததே.

கிரிக்கெட் கிரவுண்டில் கபடி ஆடிய டேவிட் வார்னர்… ரசிகர்களே வியக்கும் வீடியோ!

முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் காபாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட்