அனிருத் இசையை கேட்டு பிரமித்த பிரமாண்ட இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,September 03 2017]

இளம் இசைப்புயல் அனிருத்துக்கு இந்த ஆண்டு பிரம்மாதமான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். அவர் இசையமைத்த அஜித்தின் 'விவேகம்' பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு அவரது இசையில் உருவான சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', மற்றும் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' ஆகிய படங்களும் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடித்து வரும் தெலுங்கு படம் ஒன்றுக்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். இது அனிருத் இசையமைக்கும் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டீசர் நேற்று பவன்கல்யாண் பிறந்த நாளை அடுத்து வெளியானது. இந்த டீசரின் பின்னணி இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைத்துள்ளது.

இந்த நிலையில் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, அனிருத்தின் இசையை தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார். 'வாவ்... என்ன ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் மெலோடி.. பாடல் டீசரிலேயே அசத்திவிட்டது பவர் ஸ்டார் த்ரிவிக்ரம் ஸ்டைல்; என ராஜமெளலி குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு பின்னர் அனிருத் தெலுங்கு திரையுலகிலும் பிசியாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அனிதாவுக்கு நடிகர் சந்தானம் இரங்கல் செய்தி

மருத்துவ கனவுகளுடன் வாழ்ந்த அனிதா, உயிரற்ற பிணமாகி நேற்று சாம்பலும் ஆகிவிட்டார். ஆனாலும் அவருக்கான இரங்கல்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு கொண்டே வருகிறது...

அனிதாவுக்கு அஞ்சலி. தினகரனுக்கு உதவி செய்த திருமாவளவன்

அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் மீது அனைவரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் எடப்பாடி தலைமையிலான அரசே இதற்கு காரணம் என்றும், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த நிலை இருந்திருக்காது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்...

மருத்துவ முத்தம் போதும், இனி மருத்துவ யுத்தம்தான் தேவை: திரையுலகினர் கொதிப்பு

ஜல்லிக்கட்டு, நெடுவாசல், விவசாயிகள் பிரச்சனை என எந்த பிரச்சனைக்கும் முதல் ஆளாக குரல் கொடுப்பது திரையுலகினர்கள் தான்.

கருப்புச்சட்டை போட்டவர்களை எல்லாம் விசாரிக்கும் காவல்துறை: மெரீனாவில் பரபரப்பு

மருத்துவப்படிப்பு கனவு தகர்ந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இளைஞர்களுக்கு கீர்த்திசுரேஷின் பணிவான வேண்டுகோள்

அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து கோலிவுட் நடிகர்கள் பலர் கருத்து கூறி வந்தாலும் நடிகைகளில் ஒருசிலர் மட்டுமே இதுகுறித்து கருத்து கூறியுள்ளனர்.