close
Choose your channels

இன்று மாலை 6 மணிக்கு அனிருத் வெளியிடவுள்ள ரகசியம்!

Friday, January 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல்', 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் கசட தபற’, ‘தாராள பிரபு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் 'தாராள பிரபு திரைப்படம் விந்துதானம் குறித்த விழிப்புணர்ச்சியை கொண்ட கதையம்சம் கொண்ட படம் என்பதும், பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'விக்கி டோனர்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார்

இந்தநிலையில் இந்த படத்தின் டைட்டில் கேரக்டரான ‘பிரபு’ என்பவர் யார்? என்பது குறித்த ரகசியத்தை இசையமைப்பாளர் அனிருத் இன்று மாலை 6 மணிக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிக்கவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த ரகசியம் என்ன என்பதை இன்று 6 மணிக்கு பார்ப்போம்

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக அருண்விஜய்யின் சூப்பர் ஹிட் படமான 'தடம்' படத்தின் நாயகி தன்யா ஹோப் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் விந்து தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் மருத்துவர் வேடத்தில் நடிகர் விவேக் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.