போதை மருந்து கடத்துகிறாரா நயன்தாரா?

  • IndiaGlitz, [Thursday,May 17 2018]

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரையுலகிற்கு வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நம்பர் ஒன் இடத்தை விடாமல் தக்க வைத்து கொண்டிருக்கின்றார். இந்த இடைவெளியில் எத்தனையோ நடிகைகள் வந்தும், அவருடைய மார்க்கெட்டை அசைக்க முடியவில்லை

தற்போது அவர் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'கோலமாவு கோகிலா'. நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் கதை என்னவென்று இதுவரை வெளிவராத நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தின் ஒன்லைன் கதையை கூறியுள்ளார்.

இதன்படி இந்த படத்தில் நயன்தாரா தனது குடும்பத்தின் வறுமையை போக்க போதை மருந்து கடத்துவதாகவும், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறியுள்ளார். ஆனாலும் இந்த கதையை இயக்குனர் நெல்சன் டார்க் ஹியூமர் ஜானரில் காமெடியாக அளித்துள்ளதாகவும், படம் செம ஜாலியாக இருக்கும் என்றும் அனிருத் குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.