'விவேகம்' படத்தின் 3வது பாடல் குறித்து அனிருத்

  • IndiaGlitz, [Thursday,July 13 2017]

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே வெளியான இந்த படத்தின் 'சர்வைவா மற்றும் 'தலை விடுதலை' பாடல்கள் இணையதளங்களில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது பாடல் குறித்து இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறியபோது, 'சர்வைவா பாடலுக்கும் தல விடுதலை பாடலுக்கும் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த இரண்டு பாடல்களை விட அடுத்தப் பாடல் வித்தியாசமாக இருக்கும். அது கர்நாடிக் இசை வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது' என்று கூறினார்.

மேலும் இந்த படத்தின் ரீரெக்கார்டிங் வேலைகள் அதிக உற்சாகத்துடன் செய்துவருகிறேன். அஜீத் கலக்கி இருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் வித்தியாசமாக உணர்வார்கள். இயக்குனர் சிறுத்தை சிவா, பாடலுக்கான டியூன்களை சொல்லிவிட்டு, பரிசோதனை முயற்சிக்கு என்னை விட்டுவிடுவார். அதனால்தான், தல விடுதலை மாதிரியான பாடல்களை என்னால் உருவாக்க முடிகிறது' என்று கூறினார்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

More News

நடிகை கடத்தல் வழக்கில் திலீப் சிக்கியது எப்படி? திக் திக் நிமிடங்கள்

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகர் திலீப், தனது சொந்த பகையை மனதில் வைத்து பிரபல நடிகை ஒருவரை கூலிப்படைகள் வைத்து பழிவாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவால் சரவணா செல்வரத்னம் கடைக்கு சீல் வைப்பு

நெல்லையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் புதியதாக திறக்கப்பட்ட சரவணா செல்வரத்னம் ஸ்டோர் பல்வேறு விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள புகாரை அடுத்து அதன் தரைத்தளத்தை உடனடியாக மூடி சீல் வைக்கும்படி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

போதை பழக்கத்திற்கு அடிமையான இளம் நடிகர்கள். பிரபல தயாரிப்பாளர் வேதனை

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த போதை ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் பிரபல தெலுங்கு நடிகர்கள் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது

இந்து மக்கள் கட்சிக்கு கமலின் சாட்டையடி பதில்

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சாரம் சீரழிகிறது என்ற குற்றச்சாட்டை கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.

நீதியின் முன் அனைவரும் சமம்: திலீப் கைது குறித்து பிரபல தமிழ் நடிகை

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தின் அடிப்படையான வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.