பிரம்மாண்ட படத்தில் சம்பளமே வாங்காமல் வேலைப்பார்த்த அனிருத்… ஏன் தெரியுமா?

இந்திய சினிமாவில் முக்கியத்துவம் பெற்ற இயக்குநர்களுள் ஒருவரான எஸ்எஸ் ராஜமௌலிக்காக இசையமைப்பாளர் அனிருத் 5 மொழிகளில் ஒரு பாடலைப் பாடியதாகவும் அதற்கு அவர் எந்தச் சம்பளத்தையும் வாங்கவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதை அவருடைய ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

தெலுங்கு இயக்குநரான எஸ்எஸ் ராஜமௌலி சமீபத்தில் அதிக பான் இந்தியா திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது ஜுனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணின் கூட்டணியில் “ஆர்ஆர்ஆர்“ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் திரைப்படத்தின் வெளியீடு கொரோனா காரணமாக தள்ளிக்கொண்டே வந்தது.

தற்போது மார்ச் 25 ஆம் தேதி “ஆர்ஆர்ஆர்“ திரைப்படம் நேரடியாகத் திரைக்கும் வரும் எனும் தகவலை படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியொன்றில் இயக்குநர் ராஜமௌலி, “ஆர்ஆர்ஆ“ திரைப்படத்திற்காக 5 மொழிகளில் அனிருத் பாடிய பாடல் மிக நான்றாக இருந்தது. நட்பைப் பற்றிவரும் இந்த பாடலில் அனிருத் நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் நடிப்பு, பாடல் என எதற்குமே அனிருத் சம்பளம் பெற்றுக்கொள்ளவில்லை.

மேலும் இது உங்கள் மீதுள்ள அன்பிற்காக செய்தேன் என அனிருத் தெரிவித்ததாகவும் ராஜமௌலி குறிப்பிட்டுள்ளார். பிரபல இயக்குநரின் திரைப்படத்தில் அனிருத் சம்பளம் வாங்காமல் வேலைப்பார்த்து இருக்கும் தகவல் தற்போது அவருடைய ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் 5 மொழிகளில் அனிருத் எப்படி பாடியிருப்பார் என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

More News

68 வயதிலும் அசராமல் வொர்க் அவுட் செய்யும் முதல்வர்… வைரலாகும் வீடியோ!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டதில் இருந்தே

பிப்ரவரியில் 'வலிமை' உள்பட 6 படங்கள் ரிலீஸ்: ஒரு பார்வை!

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. எனவே அஜித்தின் 'வலிமை' உள்பட பெரிய பட்ஜெட் படங்களின்

தினம் ஒரு காதலி… 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்துவரும் அதிசய மனிதன்!

தாய்லாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பார்த்த இடத்திலேயே மனதைப் பறிக்கொடுத்து

புதிய அவதாரத்தில் தல தோனி: குழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான்!

இந்திய அணியின் கேப்டனாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் தல தோனியை பார்த்த ரசிகர்களுக்கு தற்போது தல தோனியின் புதிய அவதாரம் ஒன்றை பார்க்கும் அதிஷ்டம் கிடைத்து உள்ளது.

சிம்பு பிறந்த நாளில் ரசிகர்களுக்கு கிடைக்கும் 36 வினாடி விருந்து!

நடிகர் சிம்புவின் பிறந்த நாள் நாளை கொண்டாட இருக்கும் நிலையில் நாளை அவர் நடித்து வரும் இரண்டு படங்களின் அப்டேட் வரும் என்றும் சிம்பு ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருப்பதாகவும்