லோகேஷ்க்கு கார், சூர்யாவுக்கு வாட்ச், உங்களுக்கு என்ன? அசத்தும் பதில் கூறிய அனிருத்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 300 கோடியை தாண்டி வசூல் மழை பெய்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசளித்த கமலஹாசன், ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ’விக்ரம்’ படத்தின் மலையாள வெற்றி விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கலந்து கொண்டனர். அப்போது நிருபர் ஒருவர் ’லோகேஷ்க்குக் கார் பரிசாக கொடுத்த கமல்ஹாசன், சூர்யாவுக்கு வாட்ச் பரிசாக கொடுத்த கமல்ஹாசன் உங்களுக்கு என்ன கொடுத்தார் என்று அனிருத்திடம் கேட்டார்.

இதற்கு அனிருத், ’விக்ரம்’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கொடுத்துள்ளார் என்றும் அதுவே மிகப்பெரிய பரிசு என்று அசத்தலான பதிலை கூறினார். ’விக்ரம்’ படத்தில் அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ’பத்தல பத்தல’ பாடல், இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மகளுடன் ரஜினியை சந்தித்த இயக்குனர் ஷங்கர்: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்குனர் ஷங்கர் தனது மகளுடன் சென்று பார்த்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

'தலைவர் 169' படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த ரெடின்கிங்ஸ்லே!

இயக்குனர் நெல்சன் படம் என்றாலே அந்த படத்தில் ரெடின்கிங்ஸ்லே இருப்பார் என்பதைச் சொல்லவே தேவையில்லை. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 169'

தனுஷின் எதிர்பார்ப்புக்குரிய படத்தின் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் நடித்த மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு போன் செய்தால் எங்க ஆள் தேடி வருவாங்க: கமல்ஹாசன் அறிக்கை

ரத்தம் தேவைப்படுபவர்கள் எங்கள் குழுவினர்களுக்கு செல்போனில் அழைத்தால் தேடி வந்து உதவி செய்வார்கள் என கமல்ஹாசன் அறிக்கை விட்டுள்ளார். உலக ரத்ததான தினத்தை முன்னிட்

பழைய 'விக்ரம்' படத்திற்கு சிவாஜி கணேசன் செய்த உதவி: பிரபல ஒளிப்பதிவாளர் தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் கடந்த 1986ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வித்தியாசமான