எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இணைந்த அனிருத்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்திற்கு வந்து விட்டது என்பதும், இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த ஒரு படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களுக்கு இசை அமைத்த எம்எம் கீரவாணி இசை அமைத்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் அனிருத் ஒரு புரமோஷன் பாடலை பாடி இருப்பதாகவும் அந்த பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அனிருத்துடன் இணைந்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்காக பணி செய்து தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் மிகவும் திறமையானவர், சுறுசுறுப்பானவர் என்றும் எம்எம் கீரவாணி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உங்களுடன் பணிபுரிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அனிருத் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் உள்பா பல இசையமைப்பாளர்களின் இசையில் அனிருத் பாடிய நிலையில் தற்போது எம்எம் கீரவாணி இசையிலும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

யோகிபாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லெஜண்ட் சரவணன்!

தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அது மட்டுமின்றி அவரது பிறந்தநாளில் அவரது மகனின் பெயர் வைக்கும் நிகழ்ச்சியையும்

கார் விபத்து: யாஷிகா கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா நேற்று தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சென்னை திரும்பிக் கொண்டிருந்தபோது மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயம்

பழம்பெரும் தமிழ் நடிகை காலமானார்: திரையுலகினர் அஞ்சலி!

தமிழ் உள்பட பல மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார். அவருக்கு வயது 76 

க்ளின் போல்ட்: வேற லெவலில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் பெளலிங் வீடியோ!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் பெளலிங் போட்டு கிளீன் போல்ட் ஆகும் வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு 10 லட்சத்துக்கும்

தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் நடிகை அஞ்சலி: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக தொங்கியபடி யோகாசனம் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது