மே 30ல் ரிலீஸ் ஆகவிருந்த அனிருத் இசையமைத்த மாஸ் நடிகரின் படம் தள்ளிவைப்பு.. என்ன காரணம்?


Send us your feedback to audioarticles@vaarta.com


மாஸ் நடிகர் நடிப்பில், அனிருத் இசையில் உருவான படம் மே 30ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில், தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா நடித்த "கிங்டம்" என்ற திரைப்படம், மே 30ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால், தற்போது ஜூலை 4ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்துள்ளதால், தற்போதைய சூழ்நிலையில் படத்தின் புரமோஷன்கள் மற்றும் கொண்டாட்டங்களை நடத்துவது கடினம் என்பதால், ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இருப்பினும், "கிங்டம்" படம் ஜூலை 4ஆம் தேதி ரிலீசாகும் நிலையில், அதே நாளில் பிரபல தெலுங்கு நடிகர் நிஹ்டின் நடித்த "தம்பி" என்ற படம் ரிலீசாகிறது. அதேபோல், தமிழில் சித்தார்த் நடித்த "3BHK", மற்றும் ராம் இயக்கத்தில் உருவான "பறந்து போ" ஆகிய படங்களும் ஜூலை 4ஆம் தேதி வெளியாவதால், அந்த நாளில் பெரும் போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக விஜய் தேவரகொண்டா நடித்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும், "கிங்டம்" படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ நடித்துள்ளார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Kingdom
— Vijay Deverakonda (@TheDeverakonda) May 14, 2025
July 04, 2025.
Will see you in the cinemas :) pic.twitter.com/uQUjpngygD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com