பிரபல நடிகருக்காக அனிருத் பாடிய பாடல்.. சற்றுமுன் வெளியான வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான நானி நடித்த ’ஹிட் 3’ என்ற திரைப்படம் வரும் மே ஒன்றாம் தேதி வெளியாவதாக இருக்கின்றது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த பாடலை இசை அமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும்.
நானி, ஸ்ரீநிதி செட்டி, சூர்யா ஸ்ரீனிவாஸ் உள்பட பலர் நடிப்பில் உருவான ’ஹிட் 3’ என்ற படத்தை சைலேஷ் கோலனு என்பவர் இயக்கி உள்ளார். மிக்கி மேயர் இசையமைப்பில் உருவான இந்த படம் 60 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் மே ஒன்றாம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற "தானு" என்ற பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இந்த பாடல் சற்றுமுன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழைப் போலவே, தெலுங்கிலும் அட்டகாசமாக அனிருத் பாடியுள்ளார் என்று ரசிகர்கள் இந்த பாடலை கேட்டு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
சற்றுமுன் இந்த பாடல் மீடியா வெளியாகி உள்ளது. இதில், இந்த பாடலுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com