விஷால் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிஷா ரெட்டி!

  • IndiaGlitz, [Thursday,August 29 2019]

நடிகர் விஷால் இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கோலிவுட் திரையுலகினர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் விரைவில் விஷாலின் மனைவியாக போகும் அனிஷா ரெட்டி, விஷாலுக்கு சமூக வலைத்தளம் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த திருமணம் குறித்து ஒருசில வதந்திகள் ஊடகங்களில் வலம் வந்தன. இதனால் இந்த திருமணம் நின்று போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனிஷாவின் இந்த பிறந்த நாள் வாழ்த்து உள்ளது என்பது தெளிவாகிறது. மேலும் விஷால்-அனிஷா திருமணம் வரும் அக்டோபர் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் 'ஆக்சன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள விஷால் அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன் 2' மற்றும் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 'இரும்புத்திரை 2' ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

More News

அஜித் கூறிய முக்கியமான அறிவுரை: பிக்பாஸ் அபிராமி

அஜித்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றை நேற்று பிக்பாஸ் புகழ் சாக்சி வெளியிட்ட நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்னொரு போட்டியாளரும் அஜித்துடன்

சப்டைட்டில் சம்பள பாக்கி விவகாரம்: லைகா நிறுவனம் விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று

'சிக்ஸர்' படக்குழுவினர்களுக்கு கவுண்டமணி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்! நாளை வெளிவருமா?

கவுண்டமணி நடித்த சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற மாலைக்கண் காமெடி காட்சியின் தொடர்ச்சியாக 'சிக்ஸர் படம் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

சாண்டியிடம் தப்பித்த கவின், சிக்கிய ஷெரின்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா ரொமான்ஸ் தான் அதிகமாக கவனிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. விஜய் டிவியின் புரமோ வீடியோவிலும் பெரும்பாலும் கவின், லாஸ்லியா

சச்சினை ஏன் எல்லோருக்கும் பிடிக்கின்றது? இந்த வீடியோவை பார்த்தால் தெரியும்!

இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என போற்றப்படும் சச்சினை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரது விளையாட்டை விமர்சனம் செய்பவர்கள் கூட அவரது மனித நேயத்தை,