யாருமே சரியா விளையாடலை: விமர்சித்த ரம்யா பாண்டியனை புரட்டி எடுத்த அனிதா-தாமரை

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது சூடுபிடித்துள்ளதாக தெரிகிறது

கடந்த வாரம் தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் இந்த வாரம் சினேகன், ஜூலி, சுருதி மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் நாமினேஷனில் உள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்த நிலையில் நேற்று ரம்யா பாண்டியன் சிறப்பு விருந்தாளியாக பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்கு சென்று உள்ள நிலையில், சென்றவுடன் அவர், ‘என்ன கேம் விளையாடுறீங்க... கேம்ல ஒரு சுவாரசியமே இல்லை.. ’ என்று கூறியது போட்டியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஆனால் அனிதா மற்றும் தாமரை ஆகிய இருவரும் ரம்யா பாண்டியனை கேள்விகளால் துளைத்து எடுக்கிறார்கள். இந்த கேமில் சுவராசியம் இல்லை என்று கூறுகிறாயே? சுவாரஸ்யம் ஏற்படுத்த நீ என்ன செய்திருப்பாய்? என்று அனிதா கேட்கிறார். அதேபோல் தாமரையும் கேள்வி மேல் கேள்வி கேட்க, ரம்யா பாண்டியன் பதில் சொல்ல முடியாமல் திணறுவது இன்றைய புரமோவில் இருந்து தெரிய வருகிறது.

More News

ஓய்வுக்கு இதுதான் காரணம்… வைரலாகும் ஸ்ரீசாந்தின் உருக்கமான பதிவு!

இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று குறைந்த நாட்களில் பிரபலமானவர் கேரள வீரர் ஸ்ரீசாந்த்.

காதலியை கரம்பிடித்த 22 வயது இளம் இந்திய வீரர்… ரசிகர்கள் வாழ்த்து!

இந்தியக் கிரிக்கெட் அணியில் லெக் ஸ்பின் பந்துவீச்சாளராக இருந்துவரும் ராகுல் சாஹர் தனது நீண்டநாள் காதலி இஷானியை கரம்பிடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நேட்டாவில் இணைய விரும்பவில்லை… உக்ரைன் அதிபரின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

14 நாட்களைத் தாண்டி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடுமையான இராணுவ நடவடிக்கைகளை எடுத்துவந்த நிலையில் தற்போது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கும்

வாவ், செல்வா அத்தான்: செல்வராகவனை பாராட்டிய ஐஸ்வர்யா தனுஷ்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது தனுஷ் நடித்து வரும் 'நானே வருவேன்' என்ற திரைப்படத்தை இயக்கி வருவது மட்டுமின்றி 'பீஸ்ட்' 'சாணிகாகிதம்' உள்பட ஒரு சில படங்களிலும் முக்கிய வேடத்தில்

சேல்ஸ்கேர்ள் ஆக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதை பார்த்தோம்.