ஜெய்-அஞ்சலி காதலை வெட்டவெளிச்சமாக்கிய சூர்யா-ஜோதிகா

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

நடிகை ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் இயக்குனர் பிரம்மா இயக்கிய 'மகளிர் மட்டும்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது. இந்த டீசரில் நாயகி தனது வாழ்நாளில் தான் எவ்வளவு தோசை தனது குடும்பத்திற்காக செய்து கொடுத்த கணக்கு ஒன்றின் காட்சி வரும்
இந்த காட்சி அனைவராலும் ரசிக்கப்பட்ட நிலையில் தற்போது சூர்யா-ஜோதிகா தம்பதியினர் 'தோசை சாலஞ்ச்' ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளனர். அனைத்து நட்சத்திரங்களும் தங்கள் மனைவிக்கு தோசை செய்து தர வேண்டும் என்பதுதான் இந்த சாலஞ்சின் கான்செப்ட். முதலில் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுக்கு தோசை சுட்டு கொடுத்த புகைப்படம் வெளிவந்தது.
அதேபோல் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு உள்பட பல கோலிவுட் நட்சத்திரங்கள் தங்களுடைய மனைவிக்கு தோசை செய்து கொடுத்து அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளிப்பட்டு வரும் நிலையில் நடிகர் ஜெய், நடிகை அஞ்சலிக்கு தோசை செய்து கொடுத்த புகைப்படம் தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இந்த புகைப்படம் தோசை கான்செட்ப் படி அவர்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

தேர்தல் ஆணையம் அதிரடியால் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்தா?

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திற்கு வந்த புகார்கள் குறித்து ஆராய்ந்த தேர்தல் ஆணையம் தற்போது அதிமுகவிடம் விளக்கம் கேட்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது....

தேவையில்லாமல் எங்களை சீண்ட வேண்டாம். சசிகலாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் அதிரடி நடவடிக்கைகளுக்கு திமுகதான் பின்னால் உள்ளதாக சசிகலா உள்பட அதிமுக தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்....

சூழ்ச்சி வலையில் விழுந்துவிட்டர் ஓபிஎஸ். வைகைச்செல்வன்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஒருபக்கம் செய்தியாளர்களை சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து பணியில் உள்ள சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்பது உள்பட பல அதிரடி கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் சற்று முன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக பொதுச்செயலாளர

சசிகலாதான் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி

ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த பல வருடங்களாக கருத்து தெரிவித்து வந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமே அவர்தான். ஜெயலலிதா மீது மட்டுமின்றி சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்தவர் சுவாமி...

மிடாஸ் நிறுவனத்தை நடத்துபவர் எப்படி பொதுச்செயலாளர் ஆகலாம்? பி.எச்.பாண்டியன் கேள்வி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு நேற்றிரவு முதல் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மாபெரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது அதிமுக கட்சியினர்களும், நிர்வாகிகளும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்...