close
Choose your channels

அஞ்சலியின் 'ஜான்சி' இணையத்தொடர்: இரண்டாவது சீசன் வெளியீடு

Tuesday, January 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

Tribal Horse Entertainment சார்பில் நடிகர் கிருஷ்ணா வழங்கும், இயக்குநர் திரு இயக்கத்தில், நடிகை அஞ்சலி நடித்திருந்த “ஜான்சி” தொடர் முதல் சீசன் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சீசன் வெளியாகியுள்ளது. முதல் சீசன் போலவே இரண்டாவது சீசனுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பைப் அளித்த நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் தயாரிப்பாளர் கிருஷ்ணா பேசியதாவது: சீசன் 1 தமிழ், தெலுங்கு, இந்தியில் நல்ல ஹிட் இப்போது சீசன் 2 நன்றாக போகுமென்று நம்புகிறேன். சீசன் 1 விட 2 எனக்கு நிறைய பிடித்திருக்கிறது. திரு அசத்தியிருக்கிறார். சுரேஷ் சக்ரவர்த்தி முழு காய்ச்சலோட வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். இத முதலில் 6 மாசத்தில் முடித்து விடலாமென்று தான் ஆரம்பித்தோம். ஆனால் 2 வருடம் ஆகிவிட்டது. ஆனால் உங்களுக்கு உறுதி சொல்கிறேன் சீசன் 3 யும் வரும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

இயக்குநர் திரு பேசியதாவது: சீசன் 1 நல்ல வரவேற்பு வந்தது. ஹாட்ஸ்டார் இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாகச் சொன்னார்கள். இரண்டாவது சீசன் எனும் போது கொஞ்சம் தயக்கம் இருந்தது ஆனால் சீசன் 1 போலவே இதற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. இதைத் தெலுங்கில் முழுக்க செய்திருந்தாலும் தமிழ் ஆடியன்ஸ்க்கும் பிடிக்க வேண்டுமென உழைத்திருக்கிறோம். இதில் உழைத்த அஞ்சலி, சாந்தினி மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. என் படக்குழுவிற்கும் நன்றி. சீசன் 1 போலவே இதற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் பேசியதாவது: பொதுவா வெப் சீரிஸ் டிரமாவாக இருக்கும் ஆனால் இதில் நிறைய ஆக்சன் இருந்தது. அதைக் காட்சிப்படுத்துவது கஷ்டமாக இருந்தது. இதற்கு உறுதுணையாக இருந்த நடிகர்களுக்கும் படக்குழுவிற்கும் நன்றி.

நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி பேசியதாவது: இப்போது கிங் யாரென்றால் கண்டெண்ட் தான். முதன் முதலில் ஷீட் போனபோது கோவாவில் மிகப்பெரிய செட் போட்டிருந்தார்கள். என்னங்க சினிமா மாதிரி இருக்கிறதே எனக்கேட்டேன். அந்தளவு பிரமிப்பாக இருந்தது. என்னை மிக நன்றாக பார்த்துக்கொண்டார்கள். அஞ்சலி மிகக் கஷ்டப்பட்டு ஆக்சன் காட்சியில் நடித்துள்ளார். ஒரு பெரிய பட்ஜெட் படம் போலத் தான் இயக்குனர் இந்த தொடரை எடுத்துள்ளனர். நாம் ஒரு மொழியில் எடுப்பது பல மொழிகளுக்கும் சென்று சேர்வது மகிழ்ச்சி. இதைத் தமிழ் ஆடியன்ஸ்க்கு கொண்டு சேருங்கள் நன்றி.

கழுகு இயக்குநர் சத்ய சிவா பேசியதாவது: இந்த சமூகத்தில் பெண்களுக்கு நிறையப் பிரச்சனைகள் இருக்கிறது அதைப் பெண்கள் எப்படித் தாண்டி வர வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்லியுள்ள சீரிஸ். மிகச் சிக்கலான லோகேஷ்ன்களில் நிறையவும் கஷ்டப்பட்டு எடுத்துள்ளார்கள். விஷுவல் பார்க்கும் போதே அந்த பிரமாண்டம் தெரிகிறது. எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாம் அபாரமாக இருக்கிறது. சீசன் 2 நல்ல வரவேற்பு இருக்கிறது. சீசன் 3க்கும் வரவேற்பு இருக்குமென நம்புகிறேன். பெண்களுக்கான பாடமாக இந்த சீரிஸ் இருக்கும்.

இத்தொடரில் அஞ்சலி, சாந்தினி சௌத்ரி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, முமைத் கான், கல்யாண் மாஸ்டர், ராஜ் அர்ஜுன், சரண்யா R, சம்யுக்தா ஹார்நத் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். அரவிந்த் (பண்டிகை மற்றும் டிக்கிலோனா புகழ்) ஒளிப்பதிவு செய்துள்ளார், சண்டைக்காட்சிகளை யானிக் பென் அமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.