close
Choose your channels

அஞ்சலியின் 'லிசா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, April 19, 2019 • தமிழ் Comments

இந்தியாவின் முதல் ரியல்D 3D தொழில்நுட்பத்தில் தயாரான அஞ்சலியின் லிசா திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'லிசா' திரைப்படம் வரும் மே 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான அஞ்சலியின் போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

திகில் பேய்ப்படமான இந்த படத்தில் அஞ்சலி, மார்க்கண்ட் தேஷ்பாண்டே, யோகிபாபு, பிரம்மானந்தம், சாம் ஜோன்ஸ் சலீமா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தயாரித்து ஒளிப்பதிவு செய்துள்ளார் பி.ஜி.முத்தையா. ராஜூ விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.