ரவி வீட்டுக்கு வர சம்மதிக்கும் அண்ணாமலை.. ஆனால் ஒரு நிபந்தனை: 'சிறகடிக்க ஆசை'யில் திருப்பம்

  • IndiaGlitz, [Friday,November 24 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரவி-ஸ்ருதி திருமணம் காரணமாக மீனா மேல் கோபமாக இருந்த முத்து, தற்போது தான் மீனா மீதான கோபத்தை மறந்து அவருடன் அன்புடன் இருக்கிறார். மேலும் அவருடைய காரும் கிடைத்து விட்டதை அடுத்து தற்போது மீனா - முத்து வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ரவி மற்றும் ஸ்ருதியை வீட்டுக்கு அழைத்து வர விஜயா முயற்சி செய்யும் நிலையில் முத்து மற்றும் அண்ணாமலை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரவி, ஸ்ருதியை முத்து, மீனா சந்திக்கும் நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த நிலையில் ரவி, ஸ்ருதியை வீட்டுக்கு அழைத்து வர விஜயா, அண்ணாமலை இடம் கூறும் போது மீனாவும் அதற்கு ஆதரவு தருகிறார். ரவியை மன்னித்து நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களுடைய கௌரவம் தான் அதிகரிக்கும் என்று மீனா கூறுகிறார். ஆனால் ரவியை வீட்டுக்கு வரவழைக்கும் பேச்சுக்கு இடமில்லை என்று அண்ணாமலை கறாராக கூறிய நிலையில் விஜயா திடீரென உண்ணாவிரதம் இருக்கிறார்.

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் ரவியை வீட்டுக்கு வரவழைக்க சம்மதிக்கும் அண்ணாமலை ஒரு ஒரு நிபந்தனையை விரிக்கிறார். எந்த காரணத்திற்காக ஸ்ருதியை வீட்டுக்கு அழைக்க விஜயா முயற்சிக்கிறாரோ அதை தவிடு போட்டு ஆக்கும் வகையில் அண்ணாமலையின் நிபந்தனை இருப்பதால் விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

இந்த நிலையில் முத்து இருக்கும் வீட்டிற்கு வர மாட்டேன் என்று ஸ்ருதி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ரவி, ஸ்ருதி வீட்டுக்கு வருவார்களா? அதன் பிறகு பிரச்சனைகள் ஏற்படுமா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் தான் தெரிய வரும்.

இந்த நிலையில் மனோஜ் வேலையில்லாமல் பார்க்கில் சுற்றிக் கொண்டிருப்பதை தற்செயலாக ரோகிணி பார்த்து விட அதை மனோஜ் சமாளிக்கும் காட்சிகளும் இன்றைய எபிசோடில் உள்ளது. மொத்தத்தில் இனிவரும் எபிசோடுகள் விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய் டிவியின் முக்கிய சீரியல் நடிகை திடீர் மாற்றம்.. அவருக்கு பதில் இவரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் நடித்து வரும் நடிகை திடீரென மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அவருக்கு பதில் நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவலும் தற்போது கசிந்து உள்ளது. 

த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்.. ஆசிர்வதிக்கவும் தயார் என அறிவிப்பு..!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் அவரிடம் மன்னிப்பு கேட்டதோடு அவருடைய திருமணத்தில் கலந்து கொண்டு அவரை ஆசீர்வதிக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கேப்டன் டாஸ்க்கில் தொடர்ந்து தோல்வி.. கதறியழுத போட்டியாளர்..!

பிக் பாஸ் வீட்டில் கேப்டன் டாஸ்க்கில் நான்கு முறை கலந்துகொண்டு தோல்வி அடைந்த நிலையில் இந்த முறையும் தோல்வியடைந்ததை அடுத்து, அந்த போட்டியாளர் கதறியழுத  காட்சியின் வீடியோ தற்போது

விபத்தில் சிக்கிய சூர்யா எப்படி இருக்கிறார்? அன்பான ரசிகர்களுக்கு அவரே செய்த பதிவு..!

நடிகர் சூர்யா நேற்று 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது விபத்தில் சிக்கியதாகவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் தன்னுடைய

ஹாலிவுட் ரசிகர்களுக்காக 'லியோ' குழுவினரின் மாஸ் முயற்சி.. வேற லெவல் தகவல்..!

தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர்களுக்கு தமிழகத்தை தாண்டி, இந்தியாவையும் தாண்டி ஹாலிவுட்டிலும் ரசிகர்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ஹாலிவுட் திரையுலக