close
Choose your channels

திரையுலக பிரபலத்தின் காலில் விழுந்து ஆசிபெற்ற அண்ணாமலை.. வைரல் புகைப்படங்கள்..!

Tuesday, June 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலக பிரபலத்தின் காலில் விழுந்து ஆசி பெற்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது என்பதும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று இளையராஜாவுக்கு தனது வாழ்த்துக்களை கூறினார் என்பதும் தெரிந்ததே.

மேலும் கமல்ஹாசன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் இளையராஜாவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இசைஞானியை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

இன்று மாலை, இசைஞானி இளையராஜா அவர்கள் இல்லத்துக்குச் சென்று, அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவாசகத்தை சிம்பொனி வடிவில் தந்து, நம் மனதை இசையால் உருக்கிய கலைத்தாயின் தலைமகனை தரிசித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

காலங்கள், கடவுள் பாடும் ராகங்கள் என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளை, இசைஞானி அவர்களது இசை, இன்னும் பல நூறு தலைமுறைகளுக்கும் ஒலித்து மெய்ப்பிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

மொழி, இனப் பாகுபாடின்றி, மக்களின் எல்லா வித உணர்வுகளுக்குமான தீர்வாக விளங்கும் இசைக் கடவுள், எங்கள் ராகதேவன் இளையராஜா அவர்கள், நீண்ட காலம் தமது இசையால் நம் அனைவரையும் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos