close
Choose your channels

பாஜகவில் இணையும்படி நடிகை குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!

Monday, September 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை குஷ்பு தைரியமான பெண்மணி, அவர் பாஜகவில் இணைய வேண்டுமென பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகை குஷ்பு சமீபகாலமாக பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் வெளிவந்து வருகிறது என்பதும் அந்த வதந்திகளை அவர் மறுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜகவில் குஷ்பு இணைவது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை ’குஷ்பு பாஜகவில் சேருவாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதே நேரத்தில் அவர் பாஜகவில் சேர்ந்தால் அதனை வரவேற்பேன்’ என்று கூறினார்

மேலும் ‘குஷ்பூ தைரியமான பெண்மணி, அவரின் தைரியம் அரசியலுக்கு வரும் பெண்களுக்கு ஊக்கம் கொடுக்கும். அரசியலில் பெண்களுக்கு தைரியமும் துணிச்சலும் நிச்சயம் தேவை. அது அவரிடம் நிறையவே உள்ளது. எந்த அரசியல் கருத்தாக இருந்தாலும் நல்ல புரிதலுடன் தெளிவாக பேசக்கூடியவர் குஷ்பு. எங்கள் கட்சிக்கு அவர் வந்தால் நாங்கள் நிச்சயம் வரவேற்போம். அவர் பிரதமர் மோடியின் சாதனைகளையும் பாஜக சாதனைகளையும் மக்களுக்கு எடுத்துச் செல்வார் என்று என்ற நம்பிக்கை இருப்பதால் அவர் பாஜகவுக்கு கட்டாயம் வரவேண்டும்’ என்று தெரிவித்தார்

மேலும் ’குஷ்பு ஒரு காலத்தில் பாஜகவின் திட்டங்களை கடுமையாக விமர்சனம் செய்தாலும் தற்போது எங்கள் கட்சியின் திட்டங்களை பாராட்டுகிறார். குறிப்பாக ஒரு தாயாக, ஒரு பெண்மணியாக, ஒரு அரசியல்வாதியாக புதிய கல்விக் கொள்கை குறித்து அவரது தொலைநோக்கு சிந்தனை பாராட்டுக்குரியது. குஷ்புவைபோல் தமிழக மக்களும் பாஜகவின் திட்டங்களை புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்

குஷ்புவுக்கு பகிரங்கமாகவே பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அழைப்பு விடுத்ததை அடுத்து பாஜகவில் குஷ்பு இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.