close
Choose your channels

அண்ணாமலை படத்தின் டீசர் வெளியீடு திடீர் நிறுத்தி வைப்பு: என்ன காரணம்?

Friday, May 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாஜக தலைவர் அண்ணாமலை நடிக்கும் படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த டீசர் வெளியீடு நிறுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ’அரபி’ என்ற கன்னட படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.எஸ்.விஸ்வாஸ் என்ற இரண்டு கைகளை இழந்த நீச்சல் வீரர் செய்த சாதனையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கே.எஸ்.விஸ்வாஸ்க்கு நீச்சல் பத்திரிகையாளராக அண்ணாமலை நடித்துள்ளதாகவும், இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒரே ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் அண்ணாமலை நடித்த காட்சிகளை பார்க்க பாஜக தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அண்ணாமலை நடித்த ’அரபி’ படத்தின் டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.