அண்ணாமலை படத்தின் டீசர் வெளியீடு திடீர் நிறுத்தி வைப்பு: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Friday,May 27 2022]

பாஜக தலைவர் அண்ணாமலை நடிக்கும் படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த டீசர் வெளியீடு நிறுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ’அரபி’ என்ற கன்னட படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.எஸ்.விஸ்வாஸ் என்ற இரண்டு கைகளை இழந்த நீச்சல் வீரர் செய்த சாதனையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கே.எஸ்.விஸ்வாஸ்க்கு நீச்சல் பத்திரிகையாளராக அண்ணாமலை நடித்துள்ளதாகவும், இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒரே ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் அண்ணாமலை நடித்த காட்சிகளை பார்க்க பாஜக தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அண்ணாமலை நடித்த ’அரபி’ படத்தின் டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

மதுக்கிண்ணத்தின் முன் பிக்பாஸ் மதுமிதா: செம வைரல் புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா,  மது கிண்ணத்தின் முன் உட்கார்ந்து  போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தாஜ்மஹால் என்னுடையது, மதுரை மீனாட்சி கோவில் உங்களுடையது: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் வட இந்தியாவில் 'விக்ரம்' படத்தின் புரமோஷனின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு 'தாஜ்மஹால் என்னுடையது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உங்களுடையது' என்று பதிலளித்துள்ளார்.

ஷாருக்கான் மகன் நிரபராதியா? தேசிய போதைப்பொருள் தடுப்புப் அமைப்பின் முக்கிய அறிவிப்பு

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி என போதை பொருள் தடுப்பு அமைப்பு சற்றுமுன் தெரிவித்துள்ளது.

நடிகர் அவதாரம் எடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை: சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு கன்னட திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாகவும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

’தளபதி 66’ படத்தில் இணைந்த ‘பீஸ்ட்’ நடிகை: வைரல் புகைப்படங்கள்

தளபதி விஜய் நடித்து வரும் 66வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில்