கவனமாக இருக்க வேண்டும்: திரைப்படத்துறையை விமர்சனம் செய்வது குறித்து அண்ணாமலை கருத்து!

திரைப்படத் துறையை தேவையில்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் அவ்வாறு விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

ஜெய்பீம் உள்பட ஒரு சில திரைப்படங்கள் மீது கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் திரைப்படத்துறையை விமர்சனம் செய்வது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பானக் கருத்துக்கள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை. சில இடத்திலே பாரதிய ஜனதா கட்சி நம்முடைய கண்டனங்களை கடுமையாக பதிவும் செய்திருக்கின்றது.

திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு அவர்கள் பார்த்த, படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சியின் சகோதர சகோதரிகள், சிலநேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது, எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்!

நமது இலக்கு, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாகச் செயல்படுங்கள்! எனவே திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

கொரோனா வந்தாலும் கமல்ஹாசன் நன்றாக இருப்பதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் கமலஹாசன் நன்றாக இருக்கிறார் என்றால் அதற்கு இதுதான் காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புளூசட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

புளூசட்டை மாறன் இயக்கிய 'ஆன்டி இண்டியன்' என்ற திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புளூசட்டை மாறன் கூறியிருப்பதாவது:

மருத்துவமனையில் இருந்து தொகுத்து வழங்கும் கமல்ஹாசன்: பிக்பாஸில் இன்னும் ஒரு ஆச்சரியம்!

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த ஐந்து சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த இளம் நடிகரா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

'மாநாடு' படத்தின் இரண்டு நாள் வசூல் இத்தனை கோடியா? சுரேஷ் காமாட்சி தகவல்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது என்பதும் ஒரு கட்டத்தில் ரிலீசுக்கு முந்தைய தினத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக தயாரிப்பாளர்