close
Choose your channels

'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

Wednesday, February 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு புனே மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என்றும் இதற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த இரு இடங்களிலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கும் செய்திகள் வெளியாகி உள்ளது

ரஜினியுடன் குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.