close
Choose your channels

இரு பிரிவுகளாக பிரிந்த 'அண்ணாத்த' டீம்: ரிலீஸ் எப்போது?

Thursday, November 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில் ’அண்ணாத்த’ படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருப்பதாகவும் ரஜினியும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ’அண்ணாத்த’ படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனிப்பதற்காக படக்குழுவினர் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளதாகவும், ஒரு பிரிவினர் படப்பிடிப்பிலும், இன்னொரு பிரிவினர் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியையும் கவனிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த திட்டமிடல் காரணமாக ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இது ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட ஃபேமிலி சென்டிமென்ட் படம் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.