1000 கோடியுடன் இந்த 350 கோடியையும் சேர்த்துக்கோங்க: 'கே.ஜி.எப் 2' வசூல் ராக்கிங்!

யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான ’கேஜிஎப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு மேலும் 350 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் உள்பட பான் இந்தியா திரைப்படமாக வெளியான ’கேஜிஎப் 2’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் 800 கோடி ரூபாய் வசூலித்தது. அதுவும் குறிப்பாக வட மாநிலங்களில் மட்டும் 350 கோடி ரூபாய் வசூல் ஆகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் ஆயிரம் கோடியை தாண்டி வசூலில் வெற்றி நடை போட்டு வரும் ’கேஜிஎப் 2 படத்தின் ஓடிடி உரிமையின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் போட்டியாக இருந்ததாகவும் கடைசியில் அமேசான் நிறுவனம் இந்த திரைப்படத்தை 350 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக ஜூன் மாதம் இந்த படம் அமேசான் ஓடிடியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ‘கேஜிஎப் 2’ திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் தற்போது மேலும் 350 கோடி வசூல் கிடைத்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More News

'ராக்கி பாய்': யாஷ் செல்ல மகளின் க்யூட் வீடியோ!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப் 2'  திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் பாவனியுடன் ஜோடியாகும் அமீர்: வைரல் வீடியோ

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போதே அமீர் மற்றும் பாவனி காதலித்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அமீர்-பாவனி ஜோடி சேர்ந்துள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

'ரோஜா' பாடல் பின்னணியில் நெல்சன் மனைவி வெளியிட்ட வீடியோ: இணையத்தில் வைரல்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'ரோஜா' படத்தின் பாடல் பின்னணியில் இயக்குனர் நெல்சன் மனைவி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகிறது.

கின்னஸ் சாதனை படைத்த 7 வயது சென்னை சிறுவன்!

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சூரிய பிரசன்னா

உக்ரைன் நாட்டிற்குப் திடீர் பயணம் மேற்கொண்ட பிரபல நடிகை… என்ன காரணம்?

கடந்த 2 மாதங்களாக போர் பிடியில் சிக்கி தவித்துவரும் உக்ரைனுக்கு