close
Choose your channels

'தளபதி 66' படத்தில் இணைகிறாரா இந்த பிரபல நடிகை? ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது?

Tuesday, May 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் ஏற்கனவே நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் இன்னொரு நாயகி நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை மெஹ்ரின் பிர்ஜிதா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுசீந்திரன் இயக்கிய ’நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான மெஹ்ரின் பிர்ஜிதா அதன் பின்னர் தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படத்தில் நடித்தார். மேலும் பல தெலுங்கு படங்களில் நடித்த அவர் ’தளபதி 66’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ’தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.