close
Choose your channels

கவர்ச்சி ஆட்டம், ஆபாச பேச்சு....! சில்மிஷ சிக்காவுடன் ரவுடி பேபி சூர்யா பிரபலமானது எப்படி....?

Tuesday, July 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம் என்ற பகுதியில் சபரிநகரில் வசித்து வருபவர் தான் ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி. டிக்டாக்-கில் ஆரம்ப காலத்தில் ஆடல், பாடல் வீடியோக்கள் பதிவிட்டு ஆட்டம் காட்டிய இந்த பேரிளம் பெண், லைக்குகளுக்காக கவர்ச்சி காட்ட தொடங்கினார். லைக்குகள் பெறுகப் பெறுக, ஆடைகள் குறையத் துவங்கியது. அறிவுரை கூறியவர்களை மிரட்ட தொடங்கிய சுப்புலட்சுமி, தனது பெயரை ரவுடி பேபி சூர்யா என வைத்துக்கொண்டார். தான் அழகு என்றும், தனக்கு லட்சக்கணக்கில் ஆண் ரசிகர்கள் உள்ளார்கள் என்றும் பெருமையடித்துக் கொள்ளும், இந்த வயசான பேபி, பிறரை வசைபாடுவதையே வழக்கமாக வைத்திருந்தார்.

ஊடகங்களில் வெளியான செய்தி தான் பிரபலமானதிற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். கலாய்த்து வெளியான செய்தியை, கவுரவம் என நினைத்துக்கொண்டு ரவுசு செய்து வந்தார் இந்த ரவுடி பேபி... டிக் டாக் முடக்கத்திற்கு பின் பயனாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்க, பிற செயலிகளுக்கு தாவினார்கள் இந்த பிரபல பைத்தியங்கள். அதிலும் திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர், திவ்யா,லக்கி இலக்கியா, சுகந்தி சகோதரிகள் போன்றவர்கள், சமூகவலைத்தளங்களில் செய்யும் சேட்டைகள் சகிக்க முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. இணையத்தை திறந்தாலே இம்சை தரும் இவர்களின் முகங்கள், பார்ப்போரை சலிப்படையச் செய்தது.

ஆபாச அர்ச்சனை முதல் குடிபோதை வரை:

பண ஆசையால், குணத்தை மாற்றிக்கொள்ளாத இவர்கள் செய்யும் இம்சைகள் ஏராளம். அதிலும் சூர்யா, யுடியூப் சேனல் ஒன்றை துவங்கி அதில் செய்து வரும் அட்டகாசத்தால் தான், நெட்டிசன்கள் இவரை வறுத்தெடுத்து வருகிறார்கள். அரைகுறை ஆடைகள் அணிந்து தன்னை மாடல் என நினைத்து கொண்ட, இந்த வயதான பேபி, தனது லிவிங் டூ கெதர் நண்பர் சிக்காவுடன் செய்யும் சில்மிஷங்கள் ஏராளம். யுடியூபில் கெட்டவார்த்தைகள் பேசுவதை கெத்து என நினைத்து, அட்வைஸ் கூறுபவர்களை அசிங்கமா பேசியும், சிறார்களை மரியாதை இல்லாமலும் தரக்குறைவாகவும் பேசி வருகிறார் சூர்யா.

பல ஸ்கிரிப்ட் பிராங் ஷோக்களிலும், சில ஆபாச குறும்படங்களிலும், ஒரு சில யுடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்துவிட்டு, பெரிய நடிகை போல பந்தா காட்டும் சூர்யா-வின் பேச்சுக்கள் சகிக்க முடியாத காட்சியாக இருக்கும்.

யுடியூப் வீடியோக்களில், மது அருந்திவிட்டு இந்த வயதான சிட்டுக்கள், முத்தம் கொடுத்தும் ஆபாச வேலைகள் செய்து வந்துள்ளனர். இந்த செயல்கள் பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருப்பதால், சென்னை, மதுரை, திருப்பூர், ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சமூக ஆர்வலர்கள் பலரும், சூர்யா யுடியூப் சேனலை முடக்க வேண்டும் என்றும், இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்திருந்தனர்.அதுமட்டுமில்லாமல் பல ஊர்களைச் சார்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மொபைல் போனை ஆன்லைன் வகுப்பிற்காக பயன்படுத்துவதாகவும், சூர்யா ஆபாச செயல்களில் ஈடுபடுவதாகவும் சூர்யா மீது புகார் கொடுத்திருந்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத சூர்யா "நான் அப்படித்தான் செய்வேன், உங்க பிள்ளைங்க கிட்ட போன்-அ கொடுக்காதீங்க" என பெற்றோர்களையும், குழந்தைகளையும் திட்டி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகைதீன் என்பவர், "சமூகவலைத்தளங்களில் சிலரின் உடல் பாவணைகளும் பேச்சுக்களும் தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை கெடுப்பதாக உள்ளது" என சூர்யா உள்ளிட்ட நால்வர் மீது புகார் கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில் இவளின் யுடியூப் சேனலை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வந்தது.

ரவுடி பேபி சூர்யா குறித்த செய்திகள் பத்திரிக்கைகள் மற்றும் வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இவ்வழக்கு திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர, சூர்யாவின் டியூப் சேனலை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

பெண்களை ஏமாற்றிய பிரச்சனை:

இதையடுத்து சுப்புலட்சமி நடுத்தர குடும்ப பெண்களிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி, பாலியல் தொழிலுக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தியாகவும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பிரபல பத்திரிகை ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண் ஆதாரங்களுடன் பேட்டியளிக்க, செய்தியும் வெளியாகி இருந்தது. ஆனால் இதை பொருட்படுத்தாத சூர்யா, அந்த பத்திரிக்கை நிருபரையே மிரட்டி சவால் விட்டிருந்தார். இத்துணை பிரச்சனைகள் வந்தாலும், தனக்கு அரசியல் பின்புலம் இருப்பதாகவும், பெரிய ஆட்களுடன் தொடர்பு உள்ளதாகவும், தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் வாய்ச்சவடால் விட்டு வருகிறது இந்த வயதான பேபி.

சாதிப்பேச்சு :

சமீபத்தில் குறவர் சாதியினரை குறித்து இழிவாக பேசியுள்ளார் இந்த சுப்புலட்சுமி. இதனால் "சூர்யா யுடியூப் சேனலை முடக்க வேண்டும் என்றும், சாதி குறித்து அவதூறாக பேசியதால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றும், குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக இயக்கத்தை சேர்ந்த 20 பேர் மதுரை, அழகர் கோவில் சாலையில் உள்ள காவல் நிலையத்தில், காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர்.

இதற்கிடையே டிக்டாக் லக்கி இலக்கியாவிடம், ரவுடி பேபி சூர்யா தவறான தொழிலுக்காக பேரம் பேசும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் சிங்கப்பூர் போன்று வெளிநாடுகளுக்கு பெண்களை நான்தான் கூட்டிச்செல்கிறேன். அங்கு கிராமம் தான், எந்த பிரச்சனையும் இல்லை, நான் பார்த்துக் கொள்கிறேன். மாதச்சம்பளம் உனக்கு எவ்வளவு வேண்டும் என கேள், சரிவருமா என பார்க்கலாம் என சூர்யா கேட்க, 2 மாதத்திற்கு 6 லட்சம் வேணும் என பதில் கூறுகிறார் இலக்கியா. இந்த ஆடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆன்லைன் அட்டூழியம்:

கொரோனாவின் துவக்க காலத்தில், சிங்கப்பூர் சென்று வந்த சூர்யா, கொரோனா டெஸ்ட் எடுக்க வரச்சொன்ன காவலர்களையே அலைக்கழித்த சம்பவம் காண்போரை எரிச்சலடையச்செய்தது. தான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தற்கொலை முயற்சி செய்தது, சிக்கா தன்னை ஏமாற்றி விட்டார் என முதலை கண்ணீர் வடித்து விட்டு நாடகம் போட்டது எல்லாம் இணையத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகத்தான் தான். என்னுடைய ரசிகர்கள், என் பிறந்தநாளுக்கு கிப்ட் கொடுக்கவேண்டுமென்றால் , கூகிள் பே-வில் பணம் செலுத்துங்கள், என ஆன்லைனில் பிச்சை எடுத்த சம்பவம் தான் ஹைலைட் என சொல்லலாம்.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு ஸ்பா-வில் பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக, சுப்புலட்சுமி கைதாகி விடுதலையானார். தான் ஒரு காலத்தில் தப்பு செய்ததாகவும் வீடியோவில் ஒப்புக்கொண்ட சூர்யா, பிற பெண்களின் ஒழுக்கம் குறித்து பேசும் கேவலமான செயலை வழக்கமாக வைத்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் ஒழுக்கத்தை கடைபிடிக்காமல், கலாச்சரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளும் சுப்புலட்சுமி மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்குமா..? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரவுடி பேபியின் இந்த நிலையை கண்ட ட்ரோலர்ஸ், தங்களுடைய கண்டென்டுக்கு தீனி கிடைத்து போல, இவரை வைத்து சரமாரியாக கலாய்த்து வருகிறார்கள்.இப்படி வாய்ச்சவடால் செய்யும் சூர்யாவின் கொட்டத்தை அடக்க, இணையதள ஆர்வலர்கள் பலரும் கங்கணம் கட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.