close
Choose your channels

பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பிரபல நடிகை

Wednesday, May 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பிரபல நடிகை

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சியும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், 'குத்து', 'பொல்லாதவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகையுமான ரம்யா, தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடிக்கு கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளார்.

பிரதமர் மோடி அணியும் லோரோ பியானா என்ற கோட் உலகின் விலையுயர்ந்த ஆடைகளில் ஒன்று என்றும், இந்த கோட்டின் விலை ரூ.13 லட்சம் என்றும், இந்த கோட்டை அவர் யாருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கினார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை ரம்யாவின் இந்த டுவீட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.