close
Choose your channels

வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் ஒரு கேஜிஎப் படம்.. ஹீரோ இந்த பிரபலமா?

Tuesday, May 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏற்கனவே ’கேஜிஎப்’ மற்றும் ’கேஜிஎப் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கோலார் தங்க வயல் கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் இதே பின்னணியை கொண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ’தங்கலான்’ என்ற படமும் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் கோலார் தங்க வயல் பின்னணியில் மீண்டும் தமிழில் ஒரு படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் தற்போது ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் பணியில் இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக அவர் சூர்யா நடிக்க இருக்கும் ’வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் கேஜிஎப் பின்னணியில் உருவாகும் படத்தை இயக்குவார் என்றும் அதில் தனுஷ் நாயகனாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்தாலே அந்த படம் சூப்பர் ஹிட் என்ற நிலையில் கேஜிஎப் பின்னணி கொண்ட இந்த படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.