'இந்தி தெரியாது போடா' டீசர்ட்: ஆர்டர் கொடுத்தது கனிமொழி, உற்பத்தி செய்து கொடுத்தது திமுக நிர்வாகி!

  • IndiaGlitz, [Wednesday,September 09 2020]

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டான ‘இந்தி தெரியாது போடா’ மற்றும் ‘ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ ஆகிய வாசகங்களை கொண்ட டீசர்ட்களை திரையுலக பிரபலங்கள் அணிந்தது இந்திய அளவில் டிரெண்டானது. இந்த நிலையில் இந்த டீசர்ட்டுகளை ஆர்டர் கொடுத்தது திமுக எம்பி கனிமொழி என்றும், இதனை உற்பத்தி செய்த பனியன் நிறுவனம் திமுகவுக்கு சொந்தமானது என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த டீசர்ட்களை தயாரித்து வழங்கியவரும், திருப்பூர் மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளராகவும் உள்ள திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த டி-சர்ட் டிசைன்களை கொடுத்து ஆர்டர் வழங்கினார். முதல் கட்டமாக 1500 டி- சர்ட்கள் தயாரித்து கொடுத்தேன். திரைப்பிரபலங்கள் அணிந்ததை அடுத்து ஒரே நாளில் மிகப்பெரும் டிரண்ட் ஆனதால் தற்பொழுது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிசர்ட்களுக்கான ஆர்டர்கள் வந்துள்ளது.

அமெரிக்கா, கத்தார் போன்ற நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகிறது. திருப்பூருக்கு இதன் மூலம் அதிக ஆர்டர்கள் கிடைக்கும். தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என தெரிவித்தார்.

More News

நீங்கள் தேர்வு செய்த வழி சரியானது: பிசி ஸ்ரீராமுக்கு கங்கனா பதிலடி!

பிரபல நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகிறார். சுஷாந்த் தற்கொலை உள்பட அவர் கூறிய சில கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்

இதைவிட நடிகைகளின் கைது செய்தி முக்கியமா? அன்புமணி ஆதங்கம்

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து உயிரிழந்த மாணவரின் செய்தியை விட நடிகைகளின் கைது செய்தி முக்கியமா? என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆதங்கத்துடன்

3 மாதமா விவசாயமே பார்க்கல… ரூ.3.71 கோடி மின்கட்டணம்!!! அதிர்ச்சி தகவல்!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் உதயப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெமாரம் மனதங்கி எனும் விவசாயிக்கு மின்சார வாரியத்தில் இருந்து ஒரு விவரப்பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கிறது.

தூற்றியவர்களுக்கு மத்தியில் சாதித்த தமிழன்- மூலிகை பெட்ரோல் உற்பத்திக்கு வேறு மாநிலத்தில் அனுமதி!!!

தமிழகத்தைச் சேர்ந்த ராமர் பிள்ளை என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மூலிகைப் பொருட்களில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும் என்ற தனது புதிய கண்டுபிடிப்பைக் குறித்து

கொரோனா விஷயத்தில் பெருத்த அவநம்பிக்கை- சில திடுக்கிடும் தகவல்கள்!!!

கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு பிளாஸ்மா சிகிச்சை உதவாது என ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு இருக்கிறது.