USக்கு ஒப்படைக்கப்பட வேண்டிய நபர் ஸ்பானிஷ் சிறையில் இறந்து கிடந்தார்… பகீர் பின்னணி?

  • IndiaGlitz, [Thursday,June 24 2021]

அமெரிக்க போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியும் மெக்காஃபி நிறுவனருமான ஜான் மெக்காஃபி(75) நேற்று ஸ்பானிஷ் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஜான் மெக்காஃபி கடந்த 1980களில் தனது பெயரில் வைரஸ் தடுப்பு மென்பொருளை தயாரித்து அதில் கொள்ளை லாபம் பார்த்ததாகவும் மேலும் கடந்த 2014-2018 ஆண்டு காலங்களில் வரி வருமானத்தை தாக்கல் செய்ய தவறியதாகவும் பல்வேறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இவர் மீது கிரிப்டோ கரன்சி மோசடியும் இருக்கிறது.

ஒருவேளை இவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் ஜான் மெக்காஃபி கடந்த காலங்களில் அமெரிக்காவை விட்டு வெளியேறினார். இந்நிலையில் ஸ்பானிஷ் விமான நிலையத்தில் இருந்து இன்ஸ்தான்புல் நோக்கி பறக்க இருந்த ஜான் மெக்காஃபியை கடந்த அக்டோபர் 3, 2020 அன்று ஸ்பானிஷ் போலீசார் கைது செய்தனர். இப்படி கைது செய்யப்பட்ட ஜான் மெக்காஃபியை அமெரிக்கா கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்த வழக்கு ஸ்பானிஸ் நிதிமன்றத்தில் நடத்தப்பட்டு நேற்று 16 பக்க தீர்ப்பும் வெளியாகியது. அந்த தீர்ப்பில் ஜான் மெக்காஃபியை அமெரிக்காவிற்கு ஒப்படைப்பு என முடிவுச் செய்யப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து அவரால் மேல் முறையீடு முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஸ்பானிஷ் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜான் மெக்காஃபி நேற்று தற்கொலை செய்து கொண்டார் என்று ஸ்பானிஷ் தரப்பு தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தத் தகவலை அடுத்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக  ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.