'துருவ நட்சத்திரதில்' 'துப்பறிவாளன்' நடிகை

  • IndiaGlitz, [Wednesday,January 11 2017]

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் நடிகை அனு இமானுவேல் நடிக்கவுள்ளார். இவர் இந்த படத்தின் நாயகி இல்லை என்றாலும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர்.
ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தில் விக்ரம் 'ரா' ஏஜண்ட் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, பிரிட்டன், துபாய், டெல்லி உள்பட பல லொகேஷன்களில் நடைபெறவுள்ளது.

More News

த்ரிஷா படத்தில் 2வது நாயகியான உதவி இயக்குனர்

கோலிவுட் சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போலவே த்ரிஷாவும் தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்

'பைரவா' படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு சட்டரீதியான நோட்டீஸ்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் கேரளாவில் மட்டும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையிலான பிரச்சனை காரணமாக மிகக்குறைந்த திரையரங்குகளில் வெளியாகிறது.

சூப்பர் ஸ்டாருக்கு கெட்ட வார்த்தை கற்றுக்கொடுத்த நடிகை அமைரா

ஆசியாவின் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ஜாக்கி சான் நடித்து வரும் படம் 'குங்பூ யோகா'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பிப்ரவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது.

இளையதளபதி 'பைரவா' படத்தின் போனஸ் பாடல் இதுதான்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது

'பைரவா' படத்தின் ரன்னிங் டைம் இதுதான்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படம் ஏற்கனவே 'யூ' சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் தற்போது வரிவிலக்கிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது