பும்ராவின் விடுப்பால் நடிகை அனுபமாவின் இன்ஸ்டா பதிவு வைரல்? அந்த ரகசியம் இதுதான்…

  • IndiaGlitz, [Thursday,March 04 2021]

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னை விடுவிக்குமாறு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முன்னதாக பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்து இருந்தார். தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின் பவுலிங் மட்டுமே எடுபடுகிறது என்பதால் பிசிசிஐயும் இந்த விடுப்புக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒருவரது கருத்துக்கு மற்றவர் பதில் அளித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் பும்ராவும் காதலித்து வருகின்றனர். இந்த காதலை திருமணத்தில் முடிக்கத்தான் பும்ரா விடுப்பு கோரியுள்ளார். பும்ரா விடுப்பு எடுத்து இருக்கும் அதேவேளையில் நடிகை அனுபமாவும் தன்னுடைய இன்ஸ்டாவில் Happy holiday to me எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இந்தக் காரணங்களால் நடிகை அனுபமாவின் இன்ஸ்டா பதிவு படு வைரலாகி வருகிறது.

முன்னதாக இதுகுறித்து பதில் அளித்து இருந்த நடிகை அனுபமா, பும்ரா எனக்கு நண்பர் என்று மட்டுமே பதில் அளித்து இருந்தார். ஆனால் சமூக வலைத்தளங்களில் இவர்களின் கருத்து பதிவை வைத்து ரசிகர்கள் இது காதல் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் கிசுகிசுத்து வருகின்றனர்.

மலையாளத்தில் சூப்பட் டூப்பர் ஹிட் அடித்த “பிரேமம்’‘ படத்தில் அறிமுகமான நடிகை அனுபமா தமிழில் நடிகர் தனுஷ் நடித்த “கொடி“ திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதேபால கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் பும்ராவின் விடுப்பால் நடிகை அனுபமாவின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.

More News

அருண்பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்!

நடிகர் அருண்பாண்டியன் தனது மகள் கீர்த்தி பாண்டியன் உடன் நடித்த 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து உள்ளன

அஸ்வினைவிட ஹர்பஜன் படு பயங்கரம்… முன்னாள் வீரரின் அதிரடி கருத்து!

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த ஹர்பஜன் சிங் அணி ஏலம் நடைபெறுவதற்கு முன்பே சிஎஸ்கேவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

'கர்ணன்' டீசர்: தனுஷின் அதிரடி அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 

களை கட்டியது ஐபிஎல் திருவிழா: சென்னை வந்த தல தோனிக்கு விசில் போடும் வீடியோ!

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளின் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்க உள்ளது

ரம்யா என் மனைவியை விட அழகானவர்: பிக்பாஸ் ரியோராஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரியோ என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இணையதளத்தில் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே