மாநாடு' புரமோஷனில் இறங்கிய நயன்தாரா பட வில்லன் நடிகர்!

  • IndiaGlitz, [Tuesday,February 02 2021]

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை சிம்புவின் பிறந்த நாளை அடுத்து இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

நாளை மதியம் 02.34 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் ஹிந்தி டீஸரை பாலிவுட் நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் வெளியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 'மாநாடு’ திரைப்படத்தின் மலையாள டீசரை இயக்குனர் மற்றும் நடிகர் பிருத்விராஜ் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'மாநாடு’ படத்தின் தமிழ் டீசரை யார் வெளியிடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று சொல்லவில்லை: தமிழருவி மணியன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்க மாட்டேன் என்று அறிவிக்கவில்லை என்றும் நாளையே அவர் அரசியலில் அடியெடுத்து வைக்க வாய்ப்பு இருப்பதாகவும்

இராமரின் பூமியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93? பாஜக மூத்தத் தலைவரின் வைரல் டிவிட்!

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏற்கனவே உச்சத்தை தொட்டு இருக்கும் நிலையில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சச்சின், தோனிக்கு கிடைத்த அதே வாய்ப்பு: ஆனால் மறுப்பு தெரிவித்த நடராஜன்!

சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி ஆகியோர்களுக்கு கிடைத்த வாய்ப்பு தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கும் தேடி வந்த நிலையில் அந்த வாய்ப்பை அவர் மறுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கணவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை!

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கணவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் தமிழ் நடிகை ஒருவர் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

கொரோனாவை விட கொடிய உயிர்க்கொல்லி? அச்சம் தெரிவிக்கும் CDC!

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் கொரோனா நோய்த்தொற்று குறித்த அச்சத்தில் இருந்து மக்கள் சற்று விடுபட்டு உள்ளனர்.