நீண்ட இடைவெளிக்கு பின் அனுஷ்காவின் படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,March 01 2023]

நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்த திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி என்பதும் இவர் நடித்த 'பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ திரைப்படங்கள் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ’சைலன்ஸ்’ என்ற திரைப்படத்திற்கு பிறகு அனுஷ்கா நடித்த படம் எதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்த ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ளது.

நவீன் பொலிஷெட்டி மற்றும் அனுஷ்கா ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் மகேஷ் பாபு இயக்கியுள்ளார். ராதான் இசையில் உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

'எங்கு போய் தேடுவேன்? செல்வராகவனின் இன்றைய தத்துவம்..!

பிரபல இயக்குனர் செல்வராகவன் தனக்கு நண்பர்களே இல்லை என்றும் இனிமேல் நான் எங்கு சென்று நண்பர்களை தேடுவேன் என்றும் ஆதங்கமாய் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'லியோ' பிசினஸை முந்தியதா 'சூர்யா 42'? ரிலீஸுக்கு முன்னரே செம வியாபாரம்..!

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே ரூபாய் 400

ஜெயம் ரவியின் 'அகிலன்' சென்சார் தகவல்..!

ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள 'அகிலன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என

கிளாமரில் கலக்கும் பிக்பாஸ் விஜே மகேஸ்வரி.. வைரல் புகைப்படங்கள்..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மகேஸ்வரியின் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 70 வது பிறந்தநாள்; ரஜினி, கமல், இளையராஜா வாழ்த்து..!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.