close
Choose your channels

செல்ல மகளுடன் டிரெக்கிங் சென்ற பிரபல கிரிக்கெட் வீரர்… வைரலாகும் புகைப்படங்கள்!

Wednesday, February 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராகக் கருதப்படும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினர் தங்களது செல்ல மகளுடன் தற்போது டிரெக்கிங் சென்றுள்ள நிலையில் அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிக்கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடர் போட்டியிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னுடைய குடும்பத்துடன் உத்தரகாண்ட் பகுதியிலுள்ள ரிஷிகேஷில் டிரெக்கிங் சென்றுள்ளார். மேலும் அங்குள்ள தயானந்த கிரி ஆசிரமத்தில் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனமும் செய்துள்ளார்.

முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் தொடர் போட்டியில் விளையாடிய விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் தலா 8, 11, 36 என ஒட்டுமொத்தமாக 55 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதையடுத்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடவுள்ளார்.

இந்நிலையில் தனது செல்ல மகள் வாமிகாவை முதுகில் சுமந்துகொண்டு விராட் கோலி அவர்கள் ரிஷிகேஷ் பகுதியில் டிரெக்கிங் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராகி வருகின்றன. கூடவே தயானந்த கிரி ஆசிரமத்தில் தனது மனைவி அனுஷ்காவுடன் இணைந்து அவர் சுவாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிகளுக்கு கடந்த 2017 டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் ஆன நிலையில் முதன்முறையாகத் தனது செல்ல மகள் வாமிகாவை அவர் சுமந்துகொண்டு டிரெக்கிங் சென்றுள்ள காட்சிகள் பார்ப்பதற்கு படு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி நம்பிக்கை நட்சத்திரமாக இருந்துவரும் விராட் கோலி இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 46 சதம், டெஸ்டில் 27 சதம், டி20 போட்டிகளில் ஒரு சதம் என மொத்தமாக 74 சதங்களை அடித்துள்ள நிலையில் தற்போது தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார் என்று அவரது ரசிகர்கள் வருத்தத்தை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.