கவின் ஜோடியாக நடிப்பது அனுஷ்கா ஷர்மா உறவினரா? 'மாஸ்க்' படத்தின் மாஸ் தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் கவின் நடிப்பில், வெற்றிமாறன் தயாரிப்பில், ‘மாஸ்க்’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் கவின் ஜோடியாக நடிப்பது பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகையும் விராத் கோஹ்லியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவின் நெருங்கிய உறவினர் ருஹானி ஷர்மா. இவர் ஒரே ஒரு தமிழ் படத்திலும் சில தெலுங்கு மற்றும் மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ’கடைசி பெஞ்ச் கார்த்தி’ என்ற தமிழ் படத்தில் நடித்த ருஹானி ஷர்மா, ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ’மாஸ்க்’ படத்தில் கவின் ஜோடியாக நடித்த ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments