close
Choose your channels

விராட் கோலி பேபியை கொஞ்சும் அமுல் பேபி… வைரல் டிவிட்!!!

Saturday, January 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவரும் இத்தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி குழந்தையுடைய கால்களின் படத்தை மட்டும் வெளியிட்டு இத்தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். அவர் தனது இன்ஸ்ட்ராகிராம் பதியில் வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் மென்மையான போர்வையில் போர்த்தப்பட்ட குழந்தையின் சிறிய கால்களின் படத்தை மட்டும் பகிர்ந்து கொண்டார். அந்தப் பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வரிசையில் வித்தியாசமான விளம்பரத்துக்கு பெயர் போன அமுல் நிறுவனம் தற்போது டிவிட்டரில் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறது. அதில் அனிமேடட் செய்யப்பட்ட புகைப்படத்தில் உள்ள வாசகத்திற்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தப் படத்தில் “Bowled over by this delivery. Welcome it home” என எழுதப்பட்டுள்ளது. இந்தப் பதிவு தற்போது இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது.

விராட்கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். தற்போது இத்தம்பதி அழகான பெண் குழந்தைக்கு பெற்றோர்களாகி இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு வழிநடத்தினார். அடுத்து வந்த டெஸ்ட் தொடர் போட்டியின் முதல் போட்டியில் மட்டும் கலந்து கொண்டு பின்னர் அனுஷ்கா சர்மாவின் பிரசவத்திற்காக இந்தியா திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

#Amul Topical: Anushka and Virat blessed with a baby girl! pic.twitter.com/8RigpFIeCB

— Amul.coop (@Amul_Coop) January 13, 2021

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.