கர்ப்பத்தின்போது தலைகீழ் யோகாசனம்: பிரபல நடிகையின் வைரல் புகைப்படம்!

பிரபல பாலிவுட் நடிகையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் அவருக்கு இன்னும் ஒருசில தினங்களில் குழந்தை பிறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அனுஷ்காவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக அவர் யோகாசனம் செய்ததாகவும் அப்போது அவரது கால்கலை விராட் கோலி பிடித்து இருப்பது போன்ற ஒரு புகைப்படம் பதிவாகி உள்ளது. ஆனால் இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்றும் சில மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்பதை குறிக்கும் வகையில் த்ரோபேக் என்ற ஹேஷ்டேக்கை அனுஷ்கா சர்மா பயன்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த யோகாசனத்தை மருத்துவரின் அறிவுரைப்படி தான் செய்ததாகவும் அருகில் யோகாசன ஆசிரியர் இருந்ததாகவும் அவருடைய வழிகாட்டுதலின்படி இந்த யோகாசனத்தை செய்ததாகவும் அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

கர்ப்பமான நிலையில் தலைகீழாக யோகாசனம் செய்யும் அனுஷ்கா சர்மாவின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

'தனுஷ் 43' படம் குறித்த அட்டகாசமான தகவல் தந்த ஜிவி பிரகாஷ்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'கர்ணன்' திரைப்படமும் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும்

காதலித்து கர்ப்பமாக்கினார்: இயக்குனர் மீது நடிகையின் பகீர் புகார்!

இயக்குனர் ஒருவர் தன்னை இரண்டு வருடமாக காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக நடிகை ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சினிமாக்காரனுக்கு சிங்கிள் டீயும் ஓவியம்தான்: சூரியின் வைரல் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி என்பதும் அவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

திரைப்படமாகும் இந்தியாவின் தலைசிறந்த பெண்ணின் வாழ்க்கை!

ஒரு சாதாரண மில் தொழிலாளியின் மகளாய் பிறந்து, லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றிய இந்தியாவின் தலைசிறந்த பெண் என்ற புகழ் பெற்ற உமா பிரேமனின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

சந்தானம் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: வைரலாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏ1'. இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்று சந்தானத்திற்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது