31 வயது நடிகருடன் 'மிஸ் ஷெட்டி' ஆகும் அனுஷ்கா ஷெட்டி!

  • IndiaGlitz, [Sunday,June 06 2021]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி 31 வயது இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற நடிகை அனுஷ்கா ஷெட்டி, அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். இந்த நிலையில் தற்போது யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு ‘மிஸ் ஷெட்டி’என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் நவீன் பாலிஷெட்டி என்பவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அனுஷ்காஷெட்டி அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாயகன் நவீனுக்கு 31 வயது என்பதும் அனுஷ்கா ஷெட்டிக்கு 39 வயது என்பதும், இந்த வயது வித்தியாசம் கதைக்கு மிக பொருத்தமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை மகேஷ் என்பவர் இயக்கவுள்ளார்.
 

More News

ஹேப்பி அனிவர்சரி பொண்டாட்டி: பிரபல நடிகரின் இன்ஸ்டாகிராம் பதிவு!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர் தனது திருமண நாளைக் கொண்டாடுவதை அடுத்து தனது மனைவிக்கு 'ஹாப்பி அனிவர்சரி பொண்டாட்டி' என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

என் மகள் போட்ட விதையில் வளர்ந்தது: சாண்டி மாஸ்டர் பெருமிதம்! 

பிரபல டான்ஸ் மாஸ்டர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டருக்கு லாலா பாப்பா என்ற குழந்தை உள்ளது என்பதும் க்யூட்டான அந்த குழந்தையின் புகைப்படங்கள்

அஜித்துக்கே சவால் விடும் பைக் ரைட்: பிரபல நடிகையின் வீடியோ வைரல்!

தமிழ் திரையுலகின் நடிகை ஒருவர் அஜித்க்கே சவால் விடும் வகையில் அசத்தலாக பைக் ஓட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 

கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தின் நாயகன் - நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு!

'வணக்கம் சென்னை' மற்றும் 'காளி' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி அடுத்த படத்தை இயக்குவதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று செய்திகள் வெளியானது.

'என்ன ஒரு அழகான உலகம்': மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்!

நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்க்ள் குவிந்து வருகிறது.