'அருந்ததி 2' படத்தில் அனுஷ்கா இல்லையா?

  • IndiaGlitz, [Friday,July 12 2019]

நடிகை அனுஷ்கா தமிழில் 'ரெண்டு' என்ற படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், அவருக்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் புகழ் பெற காரணமாக இருந்த படம் 'அருந்ததி'. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்தே அவர் அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்த நிலையில் தற்போது கோலிவுட் திரையுலகில் இரண்டாம் பாகம் சீசன் களைகட்டி கொண்டிருக்கும் நிலையில் 'அருந்ததி 2' படத்தையும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் 'அருந்ததி' கேரக்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத்திடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் 'ஏஞ்சல்' படத்திலும் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 'அருந்ததி' என்றாலே அனைவருக்கும் அனுஷ்கா ஞாபகம் தான் வரும் என்றும், அனுஷ்கா இல்லாத 'அருந்ததி' படத்தை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் அனுஷ்காவின் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 'அருந்ததி 2' படத்தில் அனுஷ்கா நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

நான் டாக்டர் இல்ல, டான்: மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் டிரைலர்

பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரவ் ஹீரோவாக நடித்து வரும் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

'வேண்டாம்' என்று பெயர் வைத்த பெற்றோர்: 'வேண்டும்' என்று கூப்பிட்ட ஜப்பான்!

திருத்தணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண் குழந்தைக்கு 'வேண்டாம்' என்று அந்த பெண்ணின் பெற்றோர் பெயர் வைத்தனர்.

பட்டாம்பூச்சி நடனமாடும் பட்டாம்பூச்சி லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டின் இன்னொரு ஓவியாவாகவும், கள்ளங்கபடம் இன்றி சிரித்த முகத்துடனும் இருக்கும் ஒரே போட்டியாளர் லாஸ்லியா. ஜாலியாகவும் புத்திசாலித்தனத்துடனும்

வனிதாவுக்கு மணிகட்டிய தர்ஷன்: உடைகிறது அகம்பாவ சாம்ராஜ்யம்

பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோதும் சரி, கேப்டனாக இல்லாத போதும் சரி குரலை உயர்த்தி, தான் என்ற அகங்காரத்துடன் வீட்டில் வலம் வரும் ஒரே கேரக்டர் வனிதாதான்.

'பிகில்' படத்தில் ஷாருக்கானுக்கு பதில் நடிக்கும் பிரபலம் இவர்தான்!

விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாகவும், பின்னர் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடவிருப்பதாகவும்,