'பீஸ்ட்' உடன் வெளியாகவிருந்த பிரபல நடிகர் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

  • IndiaGlitz, [Tuesday,February 15 2022]

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட பிரபல நடிகரின் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’லால் சிங் சத்தா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி பான் - இந்தியத் திரைப்படமாக அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ வெளியாக இருந்த தேதியில் ’லால் சிங் சத்தா’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

எனவே தற்போதைய நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ மற்றும் யாஷ் நடித்த ‘கே.ஜி.எப் 2’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இந்தியா முழுவதும் வெளியாகும் பான் - இந்தியா திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் இந்த கேரக்டரில் ரொம்ப வருஷமா நடிக்கவில்லை: மாளவிகா மோகனன்

தளபதி விஜய் ரொம்ப வருடமாக ரொமான்டிக் கேரக்டரில் நடிக்கவில்லை என்றும் அப்படி ஒரு கேரக்டரில் நடித்தால் மீண்டும் அவருடன் ஜோடி சேர ஆசை என்றும் மாளவிகா மேனன் தெரிவித்துள்ளார்

அரபிக்குத்து' பாடலுக்கு மாலத்தீவில் டான்ஸ் ஆடிய பூஜா ஹெக்டே: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து'  என்ற பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது என்பதும் இந்த பாடல் வெளியானதில் இருந்து தற்போது வரை இணையதளங்களில் வைரலாகி

Mr.ஐபிஎல் சுரேஷ் ரெய்னாவை எடுக்காததற்கு என்ன காரணம்… ரகசியத்தை உடைத்த சிஇஓ!

சின்னதல, மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்களிடையே அதிக வரவேற்பை

அந்த படம் ஒரு குப்பைப்படம்: கங்கனா ரனாவத்தின் சர்ச்சை பதிவு!

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வெளியான பிரபல நடிகை ஒருவரின் படத்தை குப்பை படம் என நடிகை கங்கனா ரனாவத் விமர்சனம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கில் உருவாகும் 'ரங்கோலி' படத்தின் பூஜை!

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் அவர்கள் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”. இயக்குனர்