ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் நிறுவனம் இதுதான்.. பிரமாண்டமாக உருவாக்க திட்டம்..!

  • IndiaGlitz, [Monday,September 25 2023]

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் படம் குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வந்துள்ள நிலையில் இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த நிறுவனம் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் என்ற நிறுவனம் தான்.

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், இயக்கத்தில் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகவுள்ள, இந்த புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பலகாலமாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இருவரும் இணையும் படம் விரைவில் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில், தனது திரைப் பயணத்தில் பல ப்ளாக்பஸ்டர் படங்கள் தந்து, பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்தவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். பெரிய ஹீரோக்களை வைத்து, இவர் உருவாக்கிய அத்தனை படங்களும், ஹீரோக்களுக்கு மட்டுமல்லாமல், படத்தின் அத்தனை கலைஞர்களுக்கும் திருப்புமுனை படங்களாகவே அமைந்தன. தற்போது சிறிது இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொலைக்காட்சி வழியே அறிமுகமாகி, தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். திரையுலகில் அறிமுகமான முதல் படத்திலிருந்து, அவரது தற்போதைய வளர்ச்சி அபாரமானது. வெறும் கமர்ஷியல் நாயகனாக இல்லாமல், புதிய கதைக்களத்தில், வித்தியாசமான படைப்புகளுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் நடிப்பால் கட்டிப் போட்டுள்ளார். தனக்கென தனி ரசிகர் வட்டம், மிகப்பெரிய மார்க்கெட் என அசத்தும், சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸுடன் முதல் முறையாக இணைகிறார்.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயன் இணையும் இந்தப் புதிய திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு புதிய பிரம்மாண்டமாக, புதுமையான களத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில், அனைவரும் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகவுள்ளது. பெரும் பொருட்செலவில் ஶ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

More News

ஜாலியான வெளிநாட்டு டூர்.. கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனின் வைரல் புகைப்படங்கள்..!

 கௌதம் கார்த்திக் தனது மனைவி மஞ்சிமா உடன் வெளிநாட்டு டூர் சென்ற புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

வீடியோ எல்லாம் ஷேர் பண்ண முடியாது, நானே வர்றேன்.. விஜய் டிவி பாலாவின் பரந்த மனசு..!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் பாலா ஏற்கனவே ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தது உள்பட பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

மலேசியாவுக்கு புரமோஷனுக்கு சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படங்கள்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் மலேசியாவுக்கு புரமோஷனுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

உறுதியானது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர் முருகதாஸ்.. நாயகி இந்த பிரபலமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல் வெளியான நிலையில் இன்று அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 மணி நேரம் மேக்கப்.. பல கிமீ நடந்து செல்லும் படக்குழு.. 'கங்குவா' படத்தின் ஆச்சரிய தகவல்..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த சில ஆச்சரியமான