சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் மனு: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,February 06 2020]

ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இழப்பீடு கேட்டு தன்னை மிரட்டுவதாக தர்பார் படத்தின் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்

இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் தன்னுடைய இல்லத்திற்கு வந்து தர்பார் படத்தால் தங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இழப்பீடு தரவேண்டும் என்று தன்னை மிரட்டுவதாகவும் இதனால் தனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஆர் முருகதாஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்

முன்னதாக தர்பார் படத்தால் தங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என்றும் அதனால் ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தங்களுக்கு இழப்பீடு தரவேண்டும் என்றும் இருவரது வீட்டின் முன் ஒரு சில விநியோகஸ்தர்கள் கூடியதாக தெரிகிறது. ஆனால் ஏஆர் முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அவர்களுக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஏஆர் முருகதாஸ் திடீரென சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது