close
Choose your channels

ஹாரீஸ் ஜெயராஜுடன் மீண்டும் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

Tuesday, October 20, 2015 • தமிழ் Comments

இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தை அடுத்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் 'அகிரா' என்ற பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்கும் தமிழ், தெலுங்கு என இருமொழி படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஹாரீஸ் ஜெயராஜ், மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி ஆகிய படங்களில் முருகதாஸ் உடன் இணைந்து சூப்பர் ஹிட் பாடல்களை ஹாரீஸ் ஜெயராஜ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'கத்தி' மற்றும் 'அகிரா' ஆகிய படங்களில் அனிருத்துக்கு வாய்ப்பு கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் ஹாரீஸ் ஜெயராஜுடன் தற்போது கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என்றும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz