close
Choose your channels

கோலிவுட், பாலிவுட்டை அடுத்து ஹாலிவுட்டுக்கு செல்லும் ஏ.ஆர்.முருகதாஸ்!

Friday, February 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ், 'கஜினி' உள்பட ஒருசில பாலிவுட் படங்களையும் இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கோலிவுட், பாலிவுட்டை அடுத்து தற்போது ஹாலிவுட்டுக்கு செல்கிறார்.

ஆம், ஹாலிவுட்டில் தயாராகி வரும் 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்திற்கான வசனங்களை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸின் கூர்மையான வசனத்தால் இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பு ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் ஆங்கிலத்திலும் இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்த படம் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.