ஏ.ஆர்.முருகதாஸ் அறிமுகம் செய்த நல்ல விஷயங்கள்

  • IndiaGlitz, [Saturday,November 10 2018]

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தில் ஓரிரு காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் செய்கின்றனர். சமீபத்தில் வந்த 'நோட்டா' திரைப்படத்தில் 'ஸ்டிக்கர்' அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த காட்சியை இதே அதிமுகவினர் கண்டுகொள்ளவில்லை. ஆக, போராட்டம் என்பது ஒரு படத்தில் இருக்கும் பிரச்சனைக்காக அல்ல, அதில் நடித்திருக்கும் நடிகரை பொருத்தே வருகிறது என்பதுதான் உண்மை

இந்த நிலையில் இதே 'சர்கார்' படத்தில் இதுவரை தமிழகத்தில் யாருக்குமே தெரியாத அல்லது ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்த '49P என்ற விஷயத்தை கூறியுள்ளார். இந்த படத்தில் மட்டுமின்றி அவர் தனது ஒவ்வொரு படத்திலும் இதுவரை பலர் கேள்விப்படாத நல்ல விஷயங்களை கூறியுள்ளார்.

உதாரணமாக 'போதி தர்மர்' என்ற தமிழர் ஒருவர் இருந்ததே யாருக்கும் '7ஆம் அறிவு' படம் வெளிவரும் வரை தெரியாது. அதேபோல் 'ஸ்லீப்பர் செல்' என்ற வார்த்தையே 'துப்பாக்கி' படம் வெளிவந்த பின்னர்தான் அனைவருக்கும் கேள்விப்பட்டோம்

எனவே ஒரு படைப்பாளியை சுதந்திரமாக சிந்திக்கவிட்டால் மட்டுமே அந்த படைப்பாளியிடம் இருந்து இன்னும் நல்ல விஷயங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும். போராட்டம் என்ற பெயரில் அணை கட்டிவிட்டால் அவரும் பத்தோடு பதினொன்றாக நாலு பாட்டு, நாலு சண்டை என்ற மசாலா பாணிக்கு சென்றுவிட்டால் நஷ்டம் அவருக்கல்ல, ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும்தான்.

More News

2ஆம் பாகமாக உருவாகவுள்ள நயன்தாராவின் சூப்பர் ஹிட் படம்

கோலிவுட் திரையுலகின் நாயகர்களான ரஜினி, கமல் முதல் பல நடிகர்கள் தாங்கள் நடித்த சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில்

அரசு உயரதிகாரியாக மாறிய நடிகை வரலட்சுமி

பிரபல நடிகை வரலட்சுமி நடித்துள்ள மாரி 2' படத்தில் அவருடைய கேரக்டர் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

'விஸ்வாசம்' படத்தில் திடீரென இணைந்த பிரபல நடிகர்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வந்த 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்தது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

விஜய் ஆண்டனி படத்திற்கு உதவிய சகாயம் ஐ.ஏ.எஸ்

விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு பிடிச்சவன்' திரைப்படம் இம்மாதம் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவின் நிஜப்பெயர் கோமளவல்லியா? தீபா விளக்கம்

விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் வரலட்சுமியின் கேரக்டரான கோமளவல்லி என்ற கேரக்டர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறி அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.