முடிவுக்கு வந்தது ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படம்
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் நாயகியாக நடித்து வரும் த்ரிஷா தற்போது ’ராங்கி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டில் மைனஸ் டிகிரி செல்சியஸில் நடைபெற்றது என்பதும் த்ரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனை அடுத்து விரைவில் போஸ்ட் புரோடக்ஷன் பணி தொடங்கும் என்றும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஏ.ஆர்.முருகதாஸ் கதை வசனம் எழுதிய இந்த படத்தை எம் சரவணன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ’எங்கேயும் எப்போதும்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சி. சத்யா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய இந்த படத்தில் த்ரிஷா டூப் இன்றி ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது