close
Choose your channels

அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்? ஹீரோக்கள் யார் யார் தெரியுமா?

Tuesday, April 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’தீனா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏஆர் முருகதாஸ் அதன்பின்னர் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், சூர்யா, உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனர் பட்டியலில் இணைந்தார்

இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் தற்போது ஒரு அனிமேஷன் படத்தை இயக்கி வருவதாகவும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை அவர் உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் பணிகள் தற்போது தாமதமாகி வருவதால் அடுத்தடுத்து இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது

ஒருவர் சியான் விக்ரம் என்றும் இன்னொருவர் விஜய் சேதுபதி என்றும் கூறப்படுகிறது. இருவருக்கும் ஏஆர் முருகதாஸ் கூறிய கதை பிடித்து விட்டதாகவும் இந்த இரண்டு படங்களின் திரைக்கதையை அவர் தயாராக வைத்திருப்பதாகவும், அடுத்தடுத்து இந்த இரண்டு படங்களின் அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.