சிபாரிசின் பேரில் தேசிய விருதுகள். ஏ.ஆர்.முருகதாஸ் ஆதங்கம்

  • IndiaGlitz, [Saturday,April 08 2017]

64வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் விருதுக்கு தேர்வு பெற்ற ஒருசிலர் பாரபட்சமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அமீர்கான் நடித்த 'டங்கல்' படத்திற்கு விருது கிடைக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள தேர்வுக்குழு தலைவர் இயக்குனர் பிரியதர்ஷன், அமீர்கானின் 'டங்கல்' படம் பல பிரிவுகளுக்கு கடும் போட்டியை கொடுத்ததாகவும், ஆனால் கடைசியில் நடுவர்களின் முடிவுகளால் அந்த படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.,முருகதாஸ் அவர்களும் தேசிய விருதுகள் தேர்வில் தேர்வுக்குழு பாரபட்சமாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். சிபாரிசின் பேரில் தேர்வுக்குழு நடுவர்கள் தேசிய விருது அறிவித்துள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

தினகரனை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். ஆனந்த்ராஜ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் விசுவாசியாக இருந்தவர் நடிகர் ஆனந்த்ராஜ்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முடிவில் திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் தனது ரசிகர்களை வரும் 11 முதல் 16ம் தேதி வரை சந்தித்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க திட்டமிட்டிருந்தார்.

பிரபல நடிகையை காரில் கடத்திய மர்ம கும்பல்.

பிரபல நடிகை பாவனா மர்ம நபர்களால் சமீபத்தில் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது இன்னொரு பிரபல நடிகையும் மாடல் அழகியுமான அர்ச்சனாவை ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா அணி மகளிரணியினரின் நிர்வாண மிரட்டல். அநாகரீக அரசியலின் உச்சக்கட்டம்

ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆகியோர்கள் நடத்திய நாகரீக அரசியல் இன்று அநாகரீகத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளது.

ஒரு ரூபாய் அறிவிப்பு செய்ய விஷாலுக்கு என்ன உரிமை இருக்கிறது? திரையரங்கு உரிமையாளர் சங்கம் கண்டனம்

சமீபத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்று பொறுப்பேற்ற நடிகர் விஷால், 'தமிழக திரையரங்கில் ரசிகர்கள் வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு ரூபாய் எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் விஷாலின் இந்த அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையா